Saturday 28 March 2020

மதிக்கத்தக்க உணர்வுகள்

தன் அன்பை ஆர்ப்பாட்டம் செய்து வெளிக்காட்டும் பிராணிகளுள் ஒன்று நாய். எங்கள்  வீட்டில் இருக்கும்  குட்டி நாட்டு நாய் வகையைச் சேர்ந்தவன்.அன்று கல்லூரி விடுமுறை, விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்றேன். நான் வீட்டுக்கு சென்றதும் நாலா பக்கமும் பாய்ந்து மேலே தாவி தன் அன்பை வெளிக்காட்டும். அன்று நல்ல பசி குட்டியின் அன்பை மதிக்காமல் வீட்டிற்குள் சாப்பிட சென்றுவிட்டேன். சற்று நேரம் சத்தமிட்டு பார்த்துவிட்டு அமைதியாய் படுத்துவிட்டது. நான் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்ததும் குட்டியின் கண்களில் கண்ணீர்தான் வரவில்லை அவ்வளவு ஏமாற்றம். அன்று மாலை வரை சோகமகவே இருந்தது. ஒரு குழந்தையை சமாதானம் செய்வது போல் செய்து குட்டியை என் வழிக்கு கொண்டு வந்தேன்.
குட்டியின் இந்த உணர்வுகளை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை . அன்று என் மனதில் தோன்றிய நெகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. நாம் பழகும் ஒவ்வொரு உயிரினமும்  உணர்வுகளை கொண்டவை என்பதை அன்று தான் உணர்ந்தேன். தொழில்நுட்பம் மிகுந்த காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.  மனிதன் தன்னை  சுற்றியுள்ள உயிர்களின் உணர்வுகளை மதிக்க கற்று கொள்ள வேண்டும். ஏனெனில் உணர்வுகள் மட்டுமே மாறாதவை.  நாம் தான் கண்டுகொள்வதில்லை .

1 comment: