Saturday 4 April 2020

மீனாச்சியும் பட்டாம்பூச்சியும் தொடர்கதை - பாகம் 1

மாலை 5 மணி, தட்டு  நிரம்ப தின்பண்டங்கள், தாத்தாவின் திட்டு, புங்கன் மரத்தின் தாலாட்டு, கச்சை கட்டில்  அதன் மேல் படுத்து விடலாமா இல்லை உட்காரலாமானு நான் நெளிந்துகொண்டிருதேன் .
என்னை திட்டியதில் மூச்சுவாங்கிகொண்டு காய்ந்த இலைகளை கூட்டிகொண்டிருந்தார் தாத்தா. சாப்பிடுவதற்கு உட்கார்தால்தன் வசதிபடும் என்று,  ஒருவழியாக உட்கார்ந்து  நொறுக்கு தீனிகளை திணித்துகொண்டிருக்க, மரத்திலிருந்து தாவி தட்டிலிருந்த ஐந்து சுற்று போட்ட முறுக்கை உடைத்தால் மீனாச்சி. நான் கோவத்தில் மீனச்சியை பார்க்க, உனக்கு இப்பிடிதா வெனுனு கிண்டலாக என்னை பார்த்து தாத்தா சிரிக்க, மீனாட்சி டக்குனு தாத்தா கூட்டிகுவிச்ச இலைகளின்மீது தாவி ஒலிந்து கொண்டால். ஏய் உனக்கு என்ன லொல்லு , பாலுக்கு கால சுத்துவல இணைக்கு உனக்கு பச்ச தண்ணிதான்னு கையிலிருந்த வெலக்கு மாத்தால் மீனச்சியை தள்ளி விட போக, மீனா பட்டுனு நிலத்தோடு ஓரசிட்டுருந்த புங்கன் கிழைய தாவிட்டா. 
வெலக்குமாதுலலிருந்து ஒரு குச்சி எடுத்து கோவமா மீனாச்சி மேல வீசுநாறு தாத்தா. நா உடஞ்ச முறுக்கையும் விடாம பொறுக்கி சாப்டுட்டு மீனாச்சியை பாக்க, மீனாட்சியின் பார்வை என் பக்கம் திரும்பியது. வாயில் பாதி அரைத்து வைத்த  முறுக்கை கண்ணை மூடி முழுங்கிட்டு மீனாவை பார்க்க, பொக்கைவாயிலிருந்த ஒத்தபல் தெரிய தாத்தா சிரிக்க, மீனாட்சி படார்னு தாவுனா........

Saturday 28 March 2020

Feedback published about Amazon forest fire

Article published in the தினத்தந்தி - மாணவர் ஸ்பெஷல்

 

இயற்கை அபகரிப்பு பேராபத்து

                                                     

மரம்-மழை, மரம்-காற்று, மரம்-நிழல் மரம்-உயிர் ...
கிளி வளர்த்தேன் பறந்து போனது
அணில் வளர்த்தேன் ஓடி போனது
ஆனால் மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது.. இதை உணர்வால் புரிந்து கொண்டால் மட்டுமே இயற்கை வளங்களை காக்கமுடியும்...

மனிதன் வாழ  தேவையான நிலம் நீர் காற்று போன்றவற்றை பாரபட்சமின்றி இயற்கை நமக்கு அளித்து வருகிறது... பதிலுக்கு நாம் என்ன செய்கிறோம்?
காடுகளை அழித்து குடியேறுவது, மரங்களை வெட்டி வீடு கட்டுவது, கேட்டால் மக்கள் தொகை பெருகுதல், நகரமயமாதல் போன்ற காரணம்...

இவற்றை கட்டுப்படுத்த தனி மனிதனோ அரசாங்கமோ கடுமையான நடவடிக்கையை எடுத்த பாடில்லை ... உலகில் மக்கள் தொகை பெருக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து இயற்கை வளங்களை குறைத்து வருகிறது..
2050 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக இருக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை 2019ல் கூறியிருக்கிறது... 
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இன்னும் 8 ஆண்டுகளில் உருவெடுக்கும் என தெரித்துள்ளது..
இந்த மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இயற்கை அபகரிக்கப்பட்டாலும் மனிதன் தன் அத்தியாவசிய தேவைகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது  இயற்கை அபகரிப்புக்கு ஒரு காரணம்...

மனிதன் பயன்பாட்டிற்கு அபகரித்து கொண்ட இயற்கை வளங்களை மறு உற்பத்தி செய்வதற்கு இயற்கை ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்து கொள்ளும்...
ஆனால் ஒவ்வொரு நாளும் இயற்கை அபகரிப்பு அதிகரித்து வருகிறது...

ஜூலை 29, 2019 - இந்த ஆண்டின் 209 நாட்களிலேயே ஒரு வருடத்திற்கான இயற்கை வளங்களை பயன்படுத்திவிட்டோம் என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது....
இயற்கைக்கு எதிரான செயல்கள் அனைத்தும் ஒரு சங்கிலி போன்றது.. பொளாதார வளர்ச்சி.., அதனால் ஏற்படும் புதிய தொழில்நுட்பங்கள்...தொழில்நுட்பம் ஏற்படுத்தும் எளிய உற்பத்தி முறைகள்... இவை பொருளாதார வளர்ச்சியில் ஒரு நாட்டிற்கு நன்மை அளித்தாலும் இவைதான் மக்கள் தொகை பெருக்கத்தை தீர்மானிக்கிறது....
18 ஆம் நூற்றாண்டில் ராபர்ட் மால்தாஸ் என்ற ஆங்கிலேயே பொருளியலாளர் மக்கள் தொகை பெருக்கம் குறித்த நூலில் உணவு உற்பத்திதான் மக்கள் தொகையை தீர்மானிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.....
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தி இருக்காது என்பதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்....
ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்கி இயற்கையை அழித்தும் வருகிறோம்...
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ ஆக்ஜினை சுவாசிக்கிறான்.. இதில் 20 சதவீதம் அமேசான் காடுகளில் இருந்து கிடைக்கிறது...
மரம் வெட்டுதல், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டை விட அமேசான் காடுகளில் 83 % காட்டுத்தீயின் அளவு அதிகரித்துள்ளது...
இவ்வாறு காடுகளை அழித்தல், நிலத்தடி நீர் குறைத்தல், நிலம்,நீர் காற்று மாசுபடுத்துதல், போன்ற இயற்கை வளங்களங்களுக்கு ஏற்படும் பேராபத்து மனித குலத்தையும் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் என்பதை மனதில் வைத்து இயற்கை வளங்கள் அபகரிக்கப்படுவதை கட்டிபடுத்த வேண்டும்.....

மதிக்கத்தக்க உணர்வுகள்

தன் அன்பை ஆர்ப்பாட்டம் செய்து வெளிக்காட்டும் பிராணிகளுள் ஒன்று நாய். எங்கள்  வீட்டில் இருக்கும்  குட்டி நாட்டு நாய் வகையைச் சேர்ந்தவன்.அன்று கல்லூரி விடுமுறை, விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்றேன். நான் வீட்டுக்கு சென்றதும் நாலா பக்கமும் பாய்ந்து மேலே தாவி தன் அன்பை வெளிக்காட்டும். அன்று நல்ல பசி குட்டியின் அன்பை மதிக்காமல் வீட்டிற்குள் சாப்பிட சென்றுவிட்டேன். சற்று நேரம் சத்தமிட்டு பார்த்துவிட்டு அமைதியாய் படுத்துவிட்டது. நான் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்ததும் குட்டியின் கண்களில் கண்ணீர்தான் வரவில்லை அவ்வளவு ஏமாற்றம். அன்று மாலை வரை சோகமகவே இருந்தது. ஒரு குழந்தையை சமாதானம் செய்வது போல் செய்து குட்டியை என் வழிக்கு கொண்டு வந்தேன்.
குட்டியின் இந்த உணர்வுகளை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை . அன்று என் மனதில் தோன்றிய நெகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. நாம் பழகும் ஒவ்வொரு உயிரினமும்  உணர்வுகளை கொண்டவை என்பதை அன்று தான் உணர்ந்தேன். தொழில்நுட்பம் மிகுந்த காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.  மனிதன் தன்னை  சுற்றியுள்ள உயிர்களின் உணர்வுகளை மதிக்க கற்று கொள்ள வேண்டும். ஏனெனில் உணர்வுகள் மட்டுமே மாறாதவை.  நாம் தான் கண்டுகொள்வதில்லை .